கோவையில் நடைபெற்ற ரோபோட்டிகா எனும் மாணவர்களுக்கான ஸ்டெம் திறன் போட்டி

பள்ளி மாணவர்கள் சொந்தமாக உருவாக்கிய ரோபோவை செயல் படுத்தி கவனம் ஈர்ப்பு

இளம் கண்டுபிடிப்பாளர்களின் அறிவியல்,தொழில் நுட்பம்,பொறியியல்,மற்றும் கணித பாடங்களை ஒருங்கிணைத்து மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக கோவை தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் ரோபோட்டிகா 2026 எனும் எந்திரவியல் திறன் போட்டி நடைபெற்றது…

பள்ளி மாணவர்களின் படைப்பாற்றல், சிக்கல் தீர்க்கும் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில் கோவை,,ஈரோடு,திருப்பூர்,கொச்சின், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..

குழு மற்றும் தனியாக மாணவர்கள் உருவாக்கிய ரோபோக்களை மாணவர்கள் இரண்டு பிரிவுகளில் செயல்படுத்தினர் இதில் ரோபோட்டிக் தொழில் நுட்பத்தின் கோடிங் செயல் வடிவங்களின் மூலமாக ரோபோ கேரம் மற்றும் மேனுவல் ரோவர் என ரோபோட்டிக் இயந்திரங்களை இயக்கி மாணவர்கள் கவனம் ஈர்த்தனர்…

முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில், கேலக்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அப்துல் சமத், குளோப் எஜுகேட் – டிப்ஸ் நிறுவனத்தின் மத்திய செயல் அலுவலர் ஜெயராம் பாலகிருஷ்ணன் மற்றும் தலைமை கல்வி அலுவலர் சோனாலி கீட் ஆகியோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *