பெரம்பலூர் மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.205 முதல் 20.11.2025 வரை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி சங்குப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவு கொடியினை ஏற்றி கூட்டுறவுத்துத்துறை அலுவர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் மரக்கன்றினை நட்டு வைத்தார்.

கூட்டுறவு வார விழாவின் இரண்டாம் நாளான 15.11.2025 அன்று ஆய்குடி, வேப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர் கல்வி திட்டம் முகாமும், 16.11.2025 அன்று துணைப்பதிவாளர் பால்வளம் கட்டுப்பாட்டில் உள்ள கொட்டாரகுன்று பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை சிகிச்சை முகாமும், 17.11.2025 அன்று பெரம்பலூர் அரசு மருத்துவமனை மற்றும் கூட்டுறவுத்துறை இணைந்து நடத்தும் இரத்ததான முகாமும், பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மேக்ஸி விசன் ஆப்டிக்கல்ஸ் நடத்தும் கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
தொடர்ந்து,. 18.11.2025 அன்று மாவட்ட அளவிலான கூட்டுறவு வாரவிழா பெரம்பலூர் கர்ணம் சகுந்தலம் திருமண மண்டபத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சிறந்த சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்குதல் மற்றும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

19.11.2025 அன்று கூட்டுறவு நிறுவன பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 20.11.2025 அன்று பெரம்பலூர் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தின் கூட்ட அரங்கில் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக உலகலாவிய போட்டித் தன்மைக்கான கூட்டுறவு வணிக மாதிரிகள் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாண்டியன், பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ,அட்மா தலைவர் ஜெகதீசன், சரக துணைப்பதிவாளர் இளஞ்செல்வி, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் சிவகுமார், துணைப்பதிவாளர் பயிற்சி ஜெகன், துணைப்பதிவாளர் பால்வளம் நாராயணசாமி மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் சங்க செயலாளர்கள் விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *