தலாய்லாமா புத்தமதத்தின் உச்சபட்ச தலைவராக விளங்குகிறார். மேலும் திபெத் நாட்டு அரசியலிலும் அவருடைய பங்கு முக்கியமானது. அவருக்கு கீழ் புத்தமத விவகாரங்களில் முடிவெடுக்கும் பொறுப்பு பஞ்சன் லாமா, கல்கா ஜெட்சன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு 9-வது கல்கா ஜெட்சனாக இருந்தவர் உடல்நலக்கோளாறு காரணமாக இறந்தார். அதன் பின்னர் அந்த பொறுப்பு காலியாக இருந்தது. அதனை நிரப்ப தலாய்லாமா தகுதியானவரை தேடி வந்தார். இந்தநிலையில் புத்தமதத்தின் 3-வது பெரிய தலைவராக கருதப்படும் கல்கா ஜெட்சன் பொறுப்பு மங்கோலியா நாட்டை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி தர்மசாலாவில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்வில் 5 ஆயிரம் புத்த பிட்சுகள் கலந்து கொண்டனர். தலாய்லாமா அந்த சிறுவனுக்கு பட்டம் சூட்டி அறிமுகம் செய்துள்ளார். ஆனால் வளரும் வரை அவரைப்பற்றி தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என தெரிகிறது. உலகின் அதிகாரமிக்கவர்களில் ஒருவராக இந்த 8 வயது சிறுவன் கருதப்படுவார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *