ஆலத்தூரில் முதல்வர் விஜயின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


திருப்போரூர், ஜூன் 24
தமிழக வெற்றி கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தையூர் சி.வி.தீனா (எ) தினகரன் ஆலோசனையின்படி, திருப்போரூர் அடுத்த ஆலத்தூர் ஊராட்சி, 3 வது வார்டில், தமிழக வெற்றி கழக தலைவரும், முதல்வருமான விஜயின் 52 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

த.வெ.க., உறுப்பினர், வழக்கறிஞர் ஆலை ஏ.வி.ஆனந்த் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சி.ராமச்சந்திரன், எஸ்.கார்த்திக் வரவேற்றனர்.சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் தெற்கு ஒன்றிய தலைமை நிர்வாகி பண்டிதமேடு ஆர்.கண்ணன் பங்கேற்று, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகளை வழங்கினார்.

விழாவில், ஆலத்தூர் ஊராட்சி நிர்வாகிகள் டி.ராஜேஷ், எ.மணிகண்டன், பி.ஏழுமலை, பூங்காவனம், ஆறுமுகம், கிருஷ்ணன், ராஜேந்திரன், எ.முனுசாமி, எ.ஏழுமலை, எ.பிரகாஷ், எஸ்.சதிஷ், ஆர்.அசோக், தீனா, சக்திவேல், கே.சஞ்சய், யு.கிஷோர், இ.பிரேமா, டி.ரேக்கா, யு.செல்வராணி, ஆர்.சூர்யா, தேவி, பி.உமா மகேஸ்வரி, வினித்தா, கீர்த்தனா உட்பட150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.நிறைவில், டாக்டர் எ.மனோசித்ரா நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *