ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான அலுவலக கட்டிடம் கட்ட 30 ஆண்டுகளுக்கு மேலானதால் மிகவும் பழுதடைந்திருந்தது. இதனால் புதிய கட்டிடம் கட்டித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, சென்ற திமுக ஆட்சியில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 5.90 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் கட்டிடம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது.

இருப்பினும் புதிய கட்டிடம் கட்டுவதற்கான போதிய இடம் இல்லாத காரணத்தால், அருகில் இருந்த தனியார் இடத்தில், ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான 6 சென்ட் இடத்தை தானமாக பெற்று, கட்டிடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய குழு தலைவர் வடிவேலு மேற்கொண்டார்.

தற்போது இந்த கட்டடம் தரை தளம் மற்றும் முதல் மாடி கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டு வருகிறது. இதனை நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் வலியுறுத்தினார். இந்த ஆய்வின் போது நெமிலி ஒன்றிய பொறியாளர் சரவணன் மற்றும் ஒப்பந்ததாரர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *