நெமிலி வட்டார வேளாண்மைத்துறை (ம) ஸ்பிக் உர நிறுவனம் இணைந்து விவசாயிகளுக்கு உர விநியோக பயிற்சி:-

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டாரத்தில் வேளாண்மைத்துறை மூலம் உரம் விநியோக புதிய நடைமுறை குறித்த பயிற்சி ஸ்பிக் நிறுவனத்துடன் இணைந்து பனப்பாக்கம் அஜித் குமார் கல்யாண மண்டபத்தில் ராணிப்பேட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் போது
அவர் பேசுகையில் உர விநியோக புதிய நடைமுறையை அமல்படுத்துவதற்கு விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் அவசியம் எனவும் மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் முன்னோடி மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மற்றும் விவசாயிகள் தேவைக்கேற்ப உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சிக்கு நெமிலி வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி முன்னிலை வகித்தார். ராணிப்பேட்டை மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை அலுவலர் பிரேமகுமாரி, நெமிலி வட்டார வேளாண்மை அலுவலர் திவ்யஸ்ரீ, நெமிலி உதவி வேளாண்மை அலுவலர்கள் சாரதி, செல்வகுமார், சுதாகரன், வினோத் மற்றும் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் நிர்மலா தேவி ஆகியோர் வேளாண்மைத் துறை சார்பாக கலந்து கொண்டனர். ஸ்பிக் உர நிறுவனம் சார்பாக பனப்பாக்கம் விற்பனை அலுவலர் தன்ராஜ், விற்பனை மேம்பாட்டு அலுவலர் அரவிந்த் ஆகியோர் கலந்துகொண்டு உர விற்பனை நடைமுறை குறித்து காணொளி செயல் விளக்கம் அளித்தனர்.

பயிற்சியில் நெமிலி வட்டார விவசாயிகள் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *