வடலூர்- ஜுன், 27

கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வடலூர் மனவள கலை அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 1000 மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு யோகா சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது

வடலூரில் எஸ்டி ஈடன் தனியார் பள்ளியில் சுமார் 350 மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் சுகிர்தா தாமஸ் மற்றும் தீபக் தாமஸ் தலைமையிலும்
ஓ.பி.ஆர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 300 மாணவ மாணவிகளுக்கு தலைமையாசிரியர் பூர்ணிமா தலைமையிலும் ஆபத்தானபுரம் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் முருகையன் தலைமையிலும் வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவண செல்வி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தலைமையிலும் சிறப்பு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *