கடலூர். ஜூன் -27

நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது ராகுல் காந்தி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடந்தது. அதன் ஒரு கட்டமாக நாடு முழுவதும் இது குறித்து விளக்க பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. அதனை அடுத்து கடலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் வடலூரில் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.

இதில் கலந்துகொண்ட மாவட்ட தலைவர் ஜெய.ரங்க மணி கூறியதாவது..
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்ந்து நடந்து வருகிறது இதனால் பல மாணவர்கள் உயிரிழக்கும் நிலைமையும் ஏற்படுகிறது இந்த தேர்வில் பயிற்சி மையத்திற்கும் மத்திய அரசுக்கும் ஒரு நெருக்கம் இருப்பதால் வினாத்தாள் கசிவு ஏற்படுவதாக மாணவர்கள் அச்சப்படுகின்றனர்.

எனவே மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில் தேர்வுகளை வெளிப்படை தன்மையுடன் நேர்மையுடனும் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதேபோல நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்தல் வைத்ததினால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

இதற்கு மத்திய மோடி அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் குறிப்பாக அத்துறையில் அமைச்சர் தர்மேந்திர பிரதானை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும் சிபிஎஸ்இ பொது தேர்வில் தேர்வுத்தாள் திருத்தத்தில் மறு கூட்டல் என தொடர்ந்து அவளங்களாக உள்ளன மறு கூட்டலுக்கு பின் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது மதிப்பெண் கூடுதலாக கிடைக்கிறது

இதிலிருந்து மாணவர்களின் கல்வித் தகுதியை சரிவர முடிவு செய்ய முடியவில்லை இதனால் உயர் கல்வி சேர்வதற்கு மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் மத்திய அரசின் தேர்வுகளில் வெளிப்படுத்த தன்மையும் நேர்மையும் இல்லாததால் இதுபோன்று தகுதி உள்ள மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படாதவாறு மத்திய அரசு தேர்வுகளை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் .வட்டார தலைவர்கள் குறிஞ்சிப்பாடி ராஜா ஜனார்த்தனன் கடலூர் ராமகிருஷ்ணன் வடலூர் நகர தலைவர் பலராமன் பாபு சம்பத்குமார் கணேசன் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *