கோவை துடியலூர் அருகே உள்ள வடமதுரை விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் சனி மஹாபிரதோசம் விழா விமர்சையாக நடைபெற்றது. இதில் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடன்மர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சுமார் 1000 வருடங்களுக்கு மேல் பழமையான கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் சனி மஹா பிரதோஷம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

முதலில் பெரிய நந்திக்கும் பின்னர் சிவனுக்கு சிறப்பு அபிசேக பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு பால், தயில், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீர் உள்ளிட்டவைகளால் அபிசேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து விருந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிசேக அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடன்மர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா, கோவிலை சுற்றி நடைபெற்றது. இதில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த பூஜையில் வடமதுரை, துடியலூர், பன்னிமடை, பழனிகவுண்டன்புதூர், பூச்சியூர், தொப்பம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவிற்கு அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர் பி.வி.மணி தலைமை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் அம்சவேணி பழனிச்சாமி, சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தயாநிதி குருக்கள் தலைமையில் சிவனடியார்கள் இறைவனுக்கு அபிசேக, அலங்கார பூஜைகளை செய்தனர். வடமதுரை விருந்தீஷ்வரர் கோவில் சிவவாத்திய குழுவினர் சிவவாத்தியம் இசைத்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் நவ ஹிந்துஸ்த்தான் ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் செல்வராஜன் மற்றும் சாந்தி செல்வராஜன் குடும்பத்தினர் பிரதோச பூஜைகளுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சுவாமி திருவீதி உலாவில் பங்கேற்றார். அவருக்கு விருந்தீஸ்வரர் திருக்கோவில் சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து கோபூஜை செய்து பக்த்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். அவரிடம் விருந்தீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக கழிப்பறை வசதி செய்து கொடுக்குமாரு கோவில் அறங்காவலர் பி வி மணி கோரிக்கை மனுவினை வழங்கினார்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்.டி.ஒ பழனிச்சாமி, அசோகன், வேல்முருகன், சேகர், வேலுச்சாமி, ஏ வி எம் வேல்முருகன், வெள்ளகிணர் செல்வகுமார், சூரியா வெள்ளிங்கிரி, ரவிச்சந்திரன், தணிகைசெல்வன், மோகன சுந்தரம், விஜயகுமார், பாபு, காளிதாஸ், ஜெயபால், ராஜ்கண்ணன், சுரேஷ், சண்முகசுந்தரம், மனோகரன், விஜயகுமார், நகேந்திரன், ஆடிட்டர் கிரன் ஸ்ரீ, சஷ்டி குழு ஜெயக்கொடி, கலா உட்பட பலர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *