வேப்பூர் ஜூலை – 14

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மங்களூர் அரசு மேல்நிலை பள்ளிக்குள் சுமார் 50 மாணவர்களை தேனீக்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டதுவேப்பூர் அடுத்த மங்களூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று காலையில் மாணவர்கள் பள்ளியின் உள்ளே வந்து கொண்டிருந்தனர்

அங்கிருந்த பழைமையான வேப்ப மரத்தில் ஏற்கனவே கூடு கட்டியிருந்த தேன் கூட்டில் யாரோ ஒரு குறும்புக்கார மாணவன் கல்லால் தேன் கூட்டில் அடித்துள்ளான்அதனால் அந்த நேரம் பள்ளிக்குள் நடந்து வந்து கொண்டிருந்த சுமார் 50 மாணவர்களை தேனீக்கள் கடித்து விட்டது

இதனால் 3 மாணவிகளுக்கு வாந்தி வள்ளதால் பதட்டமான ஆசிரியர்கள் மங்களூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்தொடர்ந்து 50 மாணவர்கள் வந்து கொண்டே இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் – வேப்பூர் அரசு மருத்துவமனைக்கும், கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி அங்கு சிசிச்சைக்கு சேர்ப்பட்டனர்

அதனை தொடர்ந்து வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெறும் மாணவர்களை வேப்பூர் வட்டாட்சியர் ராமர் சந்தித்து ஆறுதல் கூறினார் மணவர்களுக்கு வேப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் புலிகேசி, ஆசித் ஆகியோர் கண்காணிப்பில் தீவிர சிசிச்சை அளிக்கபட்டது மாணவர்களின் பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *