திருவாரூர்., ஜூலை.27

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வரும் நிலையில்

விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கிடங்கிற்கு லாரிகள் மூலம் எடுத்துச் செல்லாமல் நீண்ட நாட்களாக கொள்முதல் நிலையங்களில் தேங்கிருப்பதால் மற்ற விவசாயிகளின் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தேங்கியுள்ள நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடி ஊழியர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டலர் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பருவ கால பணியாளர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சணல் சாக்குகளை உடனடியாக வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊழியர்களின் போராட்டத்தின் காரணமாக விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அவதி அடைந்தனர். உடனடியாக அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *