அரியலூர், ஜூலை 27:
அரியலூரைச் சேர்ந்த திமுக வழக்கறிஞர் மு. பரமேஸ்வரன் மற்றும் அரியலூர் நகராட்சி கவுன்சிலர் செல்வராணி பரமேஸ்வரன் தம்பதியரின் மகள் ப. காவ்யாவின் காதணி விழா, அரியலூர்–கல்லங்குறிச்சி சாலையில் அமைந்துள்ள டி.டி.வி. திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சா. சி. சிவசங்கர் தலைமை வகித்து காதணி விழாவை நடத்தி வைத்தார்.
அரியலூர் நகர கழகச் செயலாளர் இரா. முருகேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். தொடர்ந்து பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், நகராட்சி துணைத் தலைவர் தங்க கலியமூர்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் தங்கை எழில்மாறன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் ஐ.பி. மணிவண்ணன், குணா உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாச் செல்வி ப. காவ்யாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விழா இனிதே நிறைவடைந்தது.