அலங்காநல்லூர். ஜூலை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டுகடையில் இந்து முன்னணி சார்பில் ஆலய தரிசன கட்டண முறையை உடனே ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்


ஒன்றிய தலைவர்கள் மராஜேஷ், ராஜா, முன்னிலை வகித்தனர் ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜா வரவேற்புரையாற்றினார்.மத்திய அரசு வழக்கறிஞரும் மாநில நிர்வாக குழு உறுப்பினருமான சுப்பையா, கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து பேசியவர் இந்துக்களின் ஆலயங்களை விட்டு அறநிலைதுறை முற்றிலுமாக வெளியேற வேண்டும் அரசு இடிக்கப்பட்ட கோவில்களை உடனே புது பொலிவுடன் கட்டிக் கொடுக்க வேண்டும் தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்டு கோவிலுக்கு திருப்பி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில் மாவட்ட பொது செயலாளர் மத்திய அரசு வழக்கறிஞர் பெருமாள்சாமி,மாவட்டத் தலைவர் குருஜிஇராமச்சந்திரன் மாவட்டத் துணைத் தலைவர் வழக்கறிஞர் முருகன்,ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன்,ஒன்றிய துணைத் தலைவர் சேகர்,ஒன்றிய செயலாளர் முருகன் ஆறுமுகம் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *