திருவொற்றியூரில் ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கிடையே பேட்மிட்டன் விளையாட்டு போட்டி மற்றும் ஆர்சரி ஓவியம் நடனம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது உண்டு இதில் 14 ஆம் ஆண்டு ராசி கோப்பையை முன்னிட்டு கடந்த 45 நாட்களாக சென்னை மாநகரில் உள்ள 63 பள்ளிகளில் இருந்து 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவை முன்னிட்டு ஸ்மார்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ஆர். நேரு ராமசாமி தலைமையில் தொழிலதிபர்கள் ஜி. வரதராஜன் ஆர்.சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் நே.ஸ்ரீ சம்யா வரவேற்று பேசினார் ஈஸ்வரி முருகேசன் பி. சுமதி ஜெ.செந்தில்சாமி குத்து விளக்கு ஏற்றினர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசினை காவல்துறை டிஐஜி அன்னி விஜயா பரிசு வழங்கினார் நிகழ்ச்சியில் கிருடாபாரதி ஒருங்கிணைப்பாளர் சி. வேலாயுதம் வழக்கறிஞர் ஜி. கே. ரங்கநாதன் எஸ் மிதுல்ராம் பேராசிரியர் டாக்டர் கே. செந்தில்குமார் டாக்டர் ஜமால்சரீப் இ. தியாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர் பல்வேறு நிகழ்வுகளில் சாதனை புரிந்த எல். ராமமூர்த்தி சி. கிருஷ்ணன் எஸ்.ஜெகதாலபிரதாபன் எம். சொக்கலிங்கம் வி. கருப்பையா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டன என்.கேஷன் ராமசாமி நன்றி கூறினார் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *