தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம் அருகே நெடுஞ்சாலை மரங்களை வெட்டியவர்கள் மீது போலீசில் புகார்.

குண்டடம் அருகே, நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் (ஏடி) குண்டடம் போலீசில் புகார் அளித்துள்ளார்.


தாராபுரம் கோவை 4வழிப்பாதையில் குண்டடம் அடுத்துள்ள மேட்டுக்கடையில் புதிதாக திற்ந்த தனியார் பேக்கரிக்கு அருகில் ரோட்டோரத்தில் நடப்பட்டு வளர்ந்து நின்ற கொன்றை, புங்கன், வேம்பு உள்ளிட்ட சுமார் 20மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்திவிட்டனர்சுமார் 15நாட்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்ததோடு, மரங்களை வெட்டியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.


இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை குண்டடம் உதவி கோட்ட பொறியாளர் பிரதீபா குண்டடம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரில் நெடுஞ்சாலை மரங்களை வெட்டியவர்கள் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபற்றி சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது, மேற்கண்ட ஒரு இடத்தில் மட்டுமல்ல, இதே ரோட்டில் ஆங்காங்கே பல இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சில இடங்களில் கலைக்கொல்லி மருந்து தெளித்தும், மரங்களின் அடிப்பகுதியில் ஆசிட் ஊற்றியும், தீவைத்தும் கருக வைத்துள்ளனர். ஆனால் நெடுஞ்சாலைத்துறையினர் மெத்தன போக்காக செயல்படுவதால்தான் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து வருகின்றன. எனவே ரோடு விரிவாக்க பணிகள் முடிந்த பின்பு மொத்தம் எத்தனை மரங்கள் நடப்பட்டன. அவற்றில் தற்போது எத்தனை மரங்கள் வளர்ந்துள்ளன. ஏனைய மரங்கள் என்னவாயின, என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *