கோவை உள்ள கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் School of IT Integrated Commerce சார்பில் ‘IT Conclave ’26’ தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கு ஆகஸ்ட் நடைபெற்றது. “Commerce 5.0 வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் AI, FinTech மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.

கல்லூரி முதல்வர் டாக்டர் பி. கீதா தலைமையுரையாற்றி, வணிகவியல் கல்வியுடன் செயற்கை நுண்ணறிவு, நிதித் தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். School of IT Integrated Commerce-இன் புலமுதன்மையர் டாக்டர் கே. ஜோதி, கருத்தரங்கின் நோக்கத்தையும், கல்வி–தொழில்துறை இணைப்பின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.நிகழ்வில் B.Com (CA), B.Com (BA), B.Com (E.Com) மற்றும் B.Com (IT) மாணவர் சங்க நிர்வாகிகளின் அறிமுகம் மற்றும் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது.


பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மேலாண்மை அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் மதிபூரணி வி. பி. நெறிப்படுத்திய குழு கலந்துரையாடலில், UST Global நிறுவனத்தின் டாக்டர் வித்யா சரத், Cognizant நிறுவனத்தின் செல்வி தரணி ஈஸ்வரன், Sunaida Solutions நிறுவனத்தின் செல்வி ஜெயஸ்ரீ ஷ்யாம்சுந்தர் மற்றும் Bhargavan Cyber Solutions நிறுவனத்தின் திரு. ராஜ்குமார் எம். ஆகியோர் பங்கேற்று, செயற்கை நுண்ணறிவு, FinTech, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், தொழில்முனைவு மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புகள் குறித்து பயனுள்ள கருத்துகளைப் பகிர்ந்தனர்.


மாணவர்கள் வல்லுநர்களுடன் நேரடியாக கலந்துரையாடி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புத் திறன்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கங்களைப் பெற்றனர். பிற்பகல் நடைபெற்ற மாணவர் கலந்துரையாடல் அமர்வும் மாணவர்களின் சிந்தனைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.IT Conclave ’26 தொழில்துறைக்கும் கல்வித்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தியதுடன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்த மாணவர்களின் அறிவை மேம்படுத்தி, எதிர்கால வணிக உலகிற்குத் தயார்படுத்தும் சிறப்பான கல்வி முயற்சியாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *