பன்னாட்டு லயன்ஸ் சங்கம் மாவட்டம் 3242F மண்டலம் ஒன்றின் திருச்சி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழா திருச்சி மணிகண்டம் இந்திரா கணேசன் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட், லயன்ஸ் கிளப் திருச்சிராப்பள்ளி ராயல், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி சைன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோ பாலிட்டன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல், லயன்ஸ் கிளப் ஆப் மாத்தூர், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெஜஸ்டிக் உள்ளிட்ட சங்கங்கள் நிகழ்வினை இணைந்து நடத்தின. மண்டலம் ஒன்றின் தலைவர் முகமது ஷபி தலைமை வகித்தார்.
தாய்ப்பால் வார மாவட்ட தலைவர் சம்பத் நிகழ்வுகளை துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மரக்கன்று நடுதல் மாவட்ட தலைவர் இளங்கோவன், சுற்றுச்சூழல் மாவட்ட தலைவர் தியாகராஜன், இலக்கு ஊக்குநர் மாவட்ட தலைவர் சரவணகுமார், மாவட்டத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன், வட்டாரத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலர் விஜயகுமார், துணைத்தலைவர் சங்கர், மகேஸ்வரி, ஹரி பிரசாத், விக்னேஷ்,உஷா உட்பட பல்வேறு லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலையில் உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்பட்டது.
உலக தாய்ப்பால் வாரம் (World Breastfeeding Week) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தாய்ப்பாலின் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச் செல்வதும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குடும்பம், மருத்துவ அமைப்புகள் மற்றும் சமூகத்தின் ஆதரவை வலுப்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.1990ஆம் ஆண்டு Innocenti Declaration எனப்படும் பிரகடனம், தாய்ப்பால் ஊட்டுதலைப் பாதுகாத்து, ஊக்குவித்து, ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது.
இதன் தொடர்ச்சியாக, WABA (World Alliance for Breastfeeding Action) அமைப்பு 1991ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்னர் 1992ஆம் ஆண்டு முதல் உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கத் தொடங்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் UNICEF உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் தாய்ப்பால் ஊட்டுதல் குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி ஏற்றுக் கொள்ளப்பட்ட Innocenti Declaration-ஐ நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
தாய்ப்பால் வாரத்தின் முக்கிய நோக்கமானது,
தாய்ப்பாலின் மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.பிறந்த குழந்தைக்கு விரைவாக தாய்ப்பால் வழங்குவதை ஊக்குவித்தல்.முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலை மட்டுமே வழங்குவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல்.தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு குடும்பம் மற்றும் சமூக ஆதரவை ஏற்படுத்துதல்.வேலை செய்யும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வலியுறுத்துதல் ஆகும்.“தாய்ப்பால் என்பது உணவு மட்டுமல்ல; குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான முதல் பாதுகாப்பு ஆகும்.
தாய்ப்பால் வார விழாவில் தாய்மார்களுக்கு சிறுதானிய மாவு, பருப்பு வகைகள், நிலக்கடலை, கொண்டக்கடலை கொண்ட ஊட்டச்சத்து தொகுப்பு போன்றவற்றை வழங்கினர்.