அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள இந்தியன் ரெட் கிராஸ் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடந்தது மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது பின்பு வளாகம் முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டது

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் ஆ சண்முகம் வரவேற்று பேசினார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாநில பொருளாளரும் அரியலூர் மாவட்ட தலைவருமான செ ஜெயராமன் மகாத்மா காந்திக்கு புகழஞ்சலி செலுத்தினார் மாவட்ட துணைத்தலைவர் எஸ் எம் சந்திரசேகர் நியமன துணைத்தலைவர் வழக்கறிஞர் செல்வராஜ் நிர்வாக குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி சிவபாக்கியம் ஆயுள் உறுப்பினர் நமச்சிவாயம் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *