கமுதி,
தமிழகத்தில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மதன் தலைமையில் கமுதி பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொண்டாடினர்.


தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக, தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் , இரு தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது தேர்தல் பிரசாரம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து, இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கமுதி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில், இராமநாதபுரம் மேற்கு மாவட்ட மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊடக பிரிவு அமைப்பாளர் முருகன்,கமுதி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கவாஸ்கர், கடலாடி வடக்கு ஒன்றியச் செயலாளர் முனியசாமி, பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மருதநல்லூர் கிளைச் செயலாளர் மகாலிங்கம், கமுதி தெற்கு ஒன்றியத் துணைச் செயலாளர் முருகன் ஆரைக்குடி கிளைச் செயலாளர் முருகலிங்கம் மற்றும் தவெக நிர்வாகிகளான தினேஷ், விவேக், ரஞ்சித் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *