தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்டெம்பாா்க் பகுதியில் நடைபெற்று வரும் மாநகராட்சி சந்தைக்கான பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்த பின் கூறுகையில் தூத்துக்குடி மாநகராட்சி பல்வேறு வகையில் நல்ல வளா்ச்சியடைந்து வருகிறது.
அதற்கு காரணம் கடல் விமானநிலையம் ரயில்நிலையம் சாலை வசதி என நான்கு கட்டமைப்பு வசதிகள் அமைய பெற்றுள்ளதால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவையும் கடந்து வௌிநாட்டு வணிகா்கள் உள்நாட்டு வணிகா்கள் வந்து செல்லும் மிகப்பொிய துறைமுகம் நகரமாக உருவாகிஉள்ளது. அப்பகுதிக்குட்பட்ட அனைவருக்கும் முறையான கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் செய்து கொடுப்பதற்கு கடமை பட்டுள்ளோம்
அந்த அடிப்படையில் தான் குடிதண்ணீா் சாலை வசதி மின்சார வசதி கழிவுநீா் வழித்தடம் பூங்காக்கள் பெண்கள் உடற்பயிற்சி கூடிய பூங்கா ஆண்களுக்கு உடற்பயிற்சி விளையாட்டுமைதானத்துடன் பூங்கா என்று அடுத்தக்கட்டத்தை நோக்கி 2040 தூத்துக்குடி எப்படி இருக்க வேண்டும் என்று அடுத்த தலைமுறையை பற்றி சிந்தித்து மாசு இல்லாத வகையில் மாநகரை உருவாக்கி அதற்கு முன் ஓவ்வொருவா் உள்ளத்தில் மரம் நடுவோம் என்ற அடிப்படையில் 60 வாா்டுபகுதிகளில் தேவையான இடங்களில் மரக்கன்றுகளை நடப்பட்டு 56 மாத கால நிா்வாகத்தில் இன்றைய தினம் பல இடங்களில் அது மரமாக வளா்ந்து விருச்சிகம் அடைந்துள்ளது.
சாலை கட்டமைப்புகளையும் முறைப்படுத்தி போக்குவரத்து நொிசலை குறைத்தது மட்டுமின்றி மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு பல ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டு புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்தை பேணி பாதுகாக்கும் வகையில் அனைத்து பகுதிகளுக்கும் தூய்மை பணியாளா்கள் இல்லம் ேதடி குப்பைகளை சேகாித்து வருகின்றனா்.
இதற்கிடையில் ஓவ்வொருவருடைய வளா்ச்சிக்கும் தொழில் அவசியம் அதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி நிா்வாகத்திற்கும் வருமானம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் புதியதாக சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்மூலம் குறைந்த வாடகையில் வணிகா்களும் பொதுமக்களுக்கு நிறைவான வகையில் பொருட்கள் விற்பனை செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எந்த நிலையிலும் மாநகராட்சியின் வளா்ச்சி தடைபடாமல் இருப்பதற்கும் மக்களுக்கான திட்டங்களும் தடையின்றி நடைபெறுவதற்கும் பொதுமக்கள் பாலமாக இருந்து ஒத்துழைக்க வேண்டும் அப்போது தான் எல்லா வளாச்சியும் ஓருங்கினைந்து வந்து சேரும் அதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு எல்லோருடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்று கூறினாா்.