எதிர்க்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்!

புதுச்சேரி வில்லியனூர் தொகுதிகுட்பட்ட தென்கோபுர வீதியில் உள்ள அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் சுமார் 368 மாணவிகளுக்கு 2023 – 2024 கல்வியாண்டிற்கான சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசெல்வி, ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *