திருச்சி ஸ்ரீரங்கத்தில் பழனிச்சாமி என்பவரின் லோடு ஆட்டோ திருடப்பட்டது. இது குறித்து அவர் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில், ஆட்டோவை திருடிச் சென்ற தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்கிற சிலம்பரசன் (32) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட ஆட்டோவும் மீட்கப்பட்டுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.