தற்போது ஃபீல் குட் மூவிக்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது-கோவையில் நடிகர் முனீஸ் காந்த் பேட்டி

நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக படங்களில் நடித்து வந்த முனீஸ் காந்த் கதை நாயகனாக நடித்து வெளி வந்துள்ள மிடில் கிளாஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..

இயக்குனர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயலட்சுமி அகத்தியன் படத்தில் நடித்துள்ள நிலையில், மிடில் கிளாஸ் படத்தின் குழுவினர் கோவை பிராட்வே திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்..

அப்போது நடிகர் முனீஸ் காந்த் பேசுகையில்,உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டதாக வும்,தமிழக முழுவதும் படத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளதாக தெரிவித்தனர்..

இந்த படம் ott ல் பார்க்க வேண்டிய படம் அல்ல என கூறிய அவர்,குடும்பத்துடன் வந்து திரையரங்கில் பார்க்க வேண்டிய ஃபீல் குட் மூவி என கூறினர்..

பெரிய படங்களுடன் சேர்ந்து சிறிய படங்களும் ஓடினால் தான் திரைப்பட துறையினர் அனைவருக்கும் மகிழ்ச்சி என தெரிவித்தனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *