வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.

துணை முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

திண்டுக்கல் மாநகர் 23-வது வட்ட திமுக சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தாள் விழா கொண்டாடப்பட்டது . ஆர்.வி நகரில் உள்ள வட்ட திமுக அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் 6-வது பகுதி செயலாளர் பஜ்லுல்ஹக், மாநகர மாவட்ட பிரதிநிதி மணிகண்டன், வார்டு செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஆர்.வி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *