கடலூர் மாவட்டம் தேவனாம்பட்டினம், துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி மற்றும் சரக்குத் துறைமுக பகுதிகளை அரசு முதன்மை செயலாளர் /தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டி.என்.வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

கடலூர் தேவனாம்பட்டினம் துறைமுக அலுவலர் பாரம்பரியக் கட்டடம் மறுசீரமைப்பு பணி மற்றும் சரக்குத் துறைமுக பகுதிகளை அரசு முதன்மை செயலாளர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டி.என்.
வெங்கடேஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அரசு முதன்மை செயலாளர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டி.என்.வெங்கடேஷ் தெரிவித்ததாவது,

பழமையான தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர் கால கட்டடங்களான துறைமுக அலுவலர் பாரம்பரிய கட்டடம் மற்றும் மருத்துவ அலுவலர் பாரம்பரியக் கட்டடம் ரூ.10.15 கோடி மதிப்பீட்டில் பழமைமாறாமல் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சுமார் 250-300 வருடங்கள் பழமைவாய்ந்த துறைமுக அலுவலர் பராம்பரியக் கட்டடம் மற்றும் சுமார் 117 வருடங்கள் பழமைவாய்ந்த மருத்துவ அலுவலர் பராம்பரிய கட்டடம் ஆகியவை வெள்ளிக் கடற்கரைக்கு அருகாமையிலேயே அமைந்துள்ளது.

370 ச.மீ பரப்பளவுள்ள தரைதளம் மற்றும் 155 ச.மீ பரப்பளவுள்ள முதல்தளம் என மொத்தம் 525 ச.மீ பரப்பளவுள்ள துறைமுக அலுவலர் கட்டடம் ரூ.4.90 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் 215 ச.மீ பரப்பளவுள்ள தரைதளம் மற்றும் 227 ச.மீ பரப்பளவுள்ள முதல்தளம் என மொத்தம் 442 ச.மீ பரப்பளவுள்ள மருத்துவ அலுவலர் கட்டடம் ரூ.5.25 கோடி மதிப்பீட்டிலும் பழமை மாறாமல் புனரமைக்கப்படுகின்றன.

பழமையான பாரம்பரியக் கட்டடங்களின் தொன்மை குறித்தும், வரலாறு குறித்தும் சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் கூடுதலாக அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தளத்திலும் அக்கட்டடத்தின் வரலாற்றினை விளக்கும் விதமாக காட்சிப்படுத்த வேண்டிய கருத்துருக்கள் பற்றியும். அதன் வடிவமைப்பு குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் எளிதில் வந்துசெல்லும் வகையில் போக்குவரத்து வசதிகள், மாற்றுத்த்திறனாளிகளுக்கான சாய்தள மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யோக சக்கர நாற்காலிகள் அமைப்பது குறித்தும் தேவையான அளவு கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படும். வசதிகள்,

கடலூர் முதுநகரில் உள்ள சரக்குத் துறைமுகத்தின் மூலம் உற்பத்திப் பொருட்களை கப்பல் மூலம் இலங்கைக்கு எளிதில் கொண்டும் செல்லும் வகையில் புதிய கப்பல் போக்குவரத்து துவங்கப்படவுள்ளது.மேலும். பொதுமக்கள் வந்துசெல்லும் பொருட்டு அவர்களுக்கு தேவையான உணவுக்கூடங்கள். ஓய்வறைகள். அடிப்படை வசதிகள். பொழுதுபோக்கு அம்சங்களுடன் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளது குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது

என அரசு முதன்மை செயலாளர் / தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் டி.என்.வெங்கடேஷ் தெரிவித்தார்.

ஆய்வின் போது துறைமுக அலுவலர் கேப்டன் அன்பரசு மற்றும் அரசு
அலுவலர்கள் உள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *