பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12 – ஆம் ஆண்டு துவக்க விழா …..
மாநில செயற்குழு உறுப்பினர் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தமாகா அலுவலகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் 12 -ஆம் ஆண்டு துவக்க விழா பாபநாசம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளரும் பாபநாசம் தெற்கு வட்டாரத் தலைவருமான சேதுராமன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.சுதாகர் மூப்பனார் , மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சுரேஷ் மூப்பனார் ஆகியோர் கலந்து கொண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினர்.
விழாவில் தஞ்சை மேற்கு மாவட்ட தலைவர் என்.கே.சேகர், மாவட்ட துணைத்தலைவர் மாஸ்கோ, பாபநாசம் வடக்கு வட்டாரத் தலைவர் விவேக், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் ஜெயக்குமார், பாபநாசம் கிழக்கு வட்டாரத் தலைவர் மணிகண்டன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட பொருளாளர் சிவ.இ.சரவணன், மாவட்ட விவசாய அணி தலைவர் முருகராஜ், மாவட்ட மாணவரணி தலைவர் கருண், மாவட்ட மகளிரணி தலைவர் சுகன்யா சங்கர்,பாபநாசம் நகர தலைவர் பக்ருதீன் அலி அகமது மாநில மண்டல மாவட்ட வட்டார பேரூராட்சி நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.