ஏர் ரைபிள், ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி தூத்துக்குடி டிலைட் பள்ளிக்கு தங்கம், வெள்ளி பதக்கம்-சாதனையாளர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டு

தூத்துக்குடி
தூத்துக்குடி, மீளவிட்டான் ரோட்டில் செயல்பட்டு வரும் டிலைட்பப்ளிக் பள்ளியின் ஒரு அங்கமாக டிலைட் ரைபிள் அகாடமி இயங்கி வருகிறது. டிலைட்ரைபிள் அகாடமியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஏர் ரைபிள் மற்றும் ஏர் பிஸ்டல் சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாநில அளவிலான 2 வது ஜிசி இன்டர் கிளப் துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் திண்டுக்கல்லில் 2025 கடந்த 15ம் தேதி நடந்தது.

போட்டியில் டிலைட் பள்ளி முதல்வர், டிலைட் பள்ளி மாணவர்கள். பள்ளியின் செயலாளர் மற்றும் டிலைட் ரைபிள் அகாடமியின் உறுப்பினர்கள் 10மீ ஏர் பிஸ்டல் மற்றும் ஏர்ரைபிள் போட்டிகளில் பங்கேற்றனர்.

இப்போட்டியில் மெர்லின் பிரமிளா தங்கப்பதக்கத்தையும், சோபியா செல்வராணி, பயிற்சியாளர் டோனிக் சத்யா மற்றும் மாணவி சத்யா வெள்ளிப் பதக்கங்களையும் வென்றனர். மாணவி ரக்ஷனா சாய்வி வெண்கல பதக்கத்தையும் வென்றார்.


இந்தப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றவர்களையும் டிலைட் பள்ளி மாணவ, மாணவிகளையும் டிலைட்ரைபிள் அகாடமி உறுப்பினரையும், டிலைட் ரைபிள் அகாடமி பயிற்சியாளர்களின் முயற்சிகளையும் டிலைட் பப்ளிக் பள்ளியின் தலைவர் ஜெயசீலன், தாளாளர் பிரபாகரன் ஜான் ஜெயக்குமார், பயிற்சியாளர் அண்டோனி மால்லன் நட்டர்ஜி பாராட்டினர். ஊக்குவித்து புதியதாக துவங்கப்பட்ட டிலைட் ரைபிள் அகாடமிக்கு இது ஒரு புதிய மைல் கல் ஆகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *