இந்தியாவின் முன்மாதிரி முதல்வராக செயல்பட்டு வரும் தமிழக முநல்வர் அனைவரின் கோரிக்கைளையும் நிறைவேற்றி வருகிறார்
கோவையில் நடைபெற்ற ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி பேச்சு
கோவையில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் பேரவை கூட்டம் போத்தனூர் பகுதியில் உள்ள ராசி அரங்கில் நடைபெற்றது..
கோவை மாநகர தெற்கு கிளை தலைவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு அமைப்பினர்,அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்..
விழாவின் ஒரு பகுதியாக மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் தொடர்ந்து பேசிய அவர்,இந்தியாவிலேயே முன்மாதிரி முதல்வராக தமிழக முதல்வர் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர்,தமிழகத்தில் மதங்களை கடந்து மனிதநேய ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்..
அதீகாரிகளாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்ற பிறகும்,ஆக்கத்துடன் செயல்பட்டு வரும் ஓய்வு பெற்ற அலுவலர்களை உள்ளபடியே தாம் பாராட்டுவதாக கூறினார்..
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 70 வயதை அடையும் ஓய்வு பெற்றவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்,ஒன்றிய அரசு ஓய்வூதியர்கள் பெறும் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை தமிழக அரசு ஓய்வுதியர்களும் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன…