வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், முதியோர் தினவிழா வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார், துணைத் தலைவர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை கலிய முருகன் தொகுத்து வழங்கினார். இந்த முதியோர் தின விழாவில் சட்மடன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பல்வேறு செயல்பாடுகள் செய்ததைப்பற்றியும் இனி செய்ய உள்ள பணிகளை அங்கு குழுமியிருந்த மூத்தகுடிமக்களிடம் சிறப்பாக எடுத்துரைத்தார்.

மேலும் சங்க உறுப்பினர்களுக்கு வருடாந்திர நினைவுப் பரிசுகளை வழங்கினார். . இந்நிகழ்ச்சியில் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்க நிர்வாகிகள், மணிமொழி உலகநாதன் உறுப்பினர்கள் இராமன் பரசுராமன் ஜெயந்தி மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் இராமசாமி, ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் காளி, சுப்பிரமணி, ரமணன், சபரிநாதன், முருகன், கார்த்திகேயன், ரஜினி முருகன், கலைமணி, பாலமுருகன், முத்துபாண்டி, ரகு, சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *