புதச்சேரி.அக்.21-முட்டை யுடன் மதிய உணவை அரசே வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க தலைவர் ஜெயபிர காஷ், செயலாளர் பிரவீன் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படும் உணவு தரமற்ற உள்ளது. எனவே முட்டை யுடன் மதிய உணவை அரசே வழங்க வேண்டும். வாரத்துக்கு ஒரு நாள் புரதம் நிறைந்த அசைவ உணவு வழங்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.புதுவையில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது. மாணவர்களுக்கு உடனடி–யாக லேப்-டாப் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பலர் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்ற னர். இதைத்தொட்ந்து மாணவர்கள் சங்கம் சார்பில் கல்வித்துறை இயக்குனரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *