புதுவையை சேர்ந்தவரிடம் இணைய வழியில் 21 லட்சத்து,50ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை கர்நாடகா சென்று இணைய வழி சிறப்பு படை போலீஸ் சார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதுச்சேரி, ஆனந்தரங்க பிள்ளை நகரில் வசிக்கும் ஜெயரட்சகன் என்பவர் கடந்த ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி புதுவை சைபர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கர்நாடகாவை சேர்ந்த சுகாஷ் என்பவர் வாட்ஸ் அப் மூலம் தன்னை தொடர்பு கொண்டு அவர் இந்திய பண மதிப்பில் ரூ.88 உள்ள யூஎஸ்டி அமெரிக்க டாலரைஐ ரூ. 85 தருவதாக கூறினார். மேலும் அவரிடம் வெளிநாட்டு பரிவர்த்தனை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைப்பதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை உண்மை என நம்பி ரூபாய் 21 லட்சத்தி ஐம்பதாயிரம் பணத்தை மேற்படி சுகாஸ் கூறிய நான்கு வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். சில நாட்களுக்குப் பிறகு சுகாஸ்ஐ தொடர்பு கொண்ட பொழுது தொடர்பு கொள்ள முடியாததால் தான் ஏமாற்றப்பட்டதாக புகார் அளித்ததனின் பேரில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி பிடிப்பதற்காக சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் .பாஸ்கரன் உத்தரவின்பேரில் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர்கள் கார்த்திகேயன் மற்றும் .கீர்த்தி தலைமையில் காவலர்கள் மணிமொழி, சதீஷ், வினோத் மற்றும் பெண் காவலர் ரோஸ்லின் மேரி ஆகியோர்களைக் கொண்டு தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேற்படி குற்றவாளி சுகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கர்நாடகமாநிலம் சித்தார்த தாவணிகரை மாவட்டம் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை பெங்களூர் விரைந்து சுகாஷ் மற்றும் சித்தார்த்தை கைது செய்தனர்.
மேற்படி குற்றவாளிகளிடம் இருந்து 6 மொபைல் போன், 20 கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் லேப்டாப், ஐந்து வங்கி கணக்கு புத்தகங்கள், சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி இரண்டு நபர்களையும் புதுவை தலைமை குற்றவியல் நீதிபதி திரு மோகன் முன்பு ஆயர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேற்கண்ட இருவருமே ஐடி இன்ஜினியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கர்நாடகாவை சேர்ந்த மோசடி நபர்கள் இதேபோன்று பல்வேறு நபர்களிடம் ஏமாற்றி இருக்ககூடும் என்ற கோணத்திலும் புதுச்சேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றார். அவர்களுடைய பல்வேறு வங்கி கணக்குகளைமுடக்கி எவ்வளவு பணம் உள்ளது , பணம் எங்கிருந்து வந்துள்ளது என்பதையும் விசாரிக்க எஸ்பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இது சம்பந்தமாக இணைய வழி காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறியதாவது கடந்த 9 மாதங்களில் மட்டும் 22 கோடி அளவிற்கு புதுச்சேரியில் மக்கள் இணைய வழி மோசடிக்காரர்களிடம் இழந்து உள்ளனர். இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருகிறோம், மார்க்கெட் விலையை விட அதே பொருளை 20சதவீதம் குறைந்த விலையில் கொடுக்கின்றோம் என இணைய வழியில் யாராவது தொடர்பு கொண்டால் அவர்களிடம் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும், ஓஎல்எக்ஸ் போன்ற பொருட்களை வாங்குகின்ற விற்கின்ற தலங்களில் நிறைய மோசடிகள் நடந்து வருவதால் அதில் பொருட்களை வாங்கும் பொழுது அல்லது விற்கும் பொழுதோ எந்த உத்தரவாதமும் இல்லாமல் முன் பின் பழக்கம் இல்லாத தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *