புதுவை மாநில கபடி சங்க அனுமதியுடன் பிச்சவீரன் பேட்டில் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய முதலாம் ஆண்டு ஆண்களுக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மொத்தம் 35 அணிகள் கலந்து கொண்டன. இதில் பிச்சவீரன் பேட் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் முதல் பரிசை தட்டி சென்றனர்.சூரமங்கலம் அணியினர் இரண்டாவது பரிசையும், 3 ஆவது பரிசை லீ ஸ்போர்ட்ஸ் வியர் அணியினரும், நான்காவது பரிசை பிச்சவீரன்பேட் எல்.எஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும் வென்றனர்.
இரண்டு நாட்கள் விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரம் இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம் , மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் , நான்காவது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கபட்டது.
இந்த பரிசளிப்பு விழாவிற்கு முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமன், புதுவை மாநில கபடி சங்க பொதுச் செயலாளர் ஆரியசாமி ஆகியோர்
தலைமை தாங்கி போட்டியை நடத்தினர். முதல் பரிசான ரூ 25 ஆயிரம் ரூபாயை கே.ஆர். ஆர். தாஸ் டிராவல்ஸ் அங்குதாஸ் வழங்கினார். இரண்டாம் பரிசான 20 ஆயிரம் ரூபாயை டேப் கன்ஸ்டிரக்ஷன் சுதாகரன் மற்றும் காவல் துறை ஆய்வாளர் கீர்த்தி ஆகியோரும், மூன்றாம் பரிசான 15 ஆயிரம் ரூபாயை வழக்கறிஞர் அனிதா, நான்காம் பரிசான 10 ஆயிரம் ரூபாயை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி ரமணி ஆகியோர் வழங்கினார்கள். போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழா பிச்சவீரன் பேட் மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக அரசு
எதிர்தரப்பு வழக்கறிஞர் மற்றும் மற்றும் சட்டப் பணிகள் ஆணையம் சசிபாலன், டாக்டர். அம்பேத்கர் சமூகநீதி இளைஞர் கூட்டமைப்பு சட்ட ஆலோசகர் பிரேம் குமார் ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை வழங்கினார்கள். வழக்கறிஞர் ஐயப்பன், வேல்ராம்பட்டு கவேந்திரன் ஆகியோர் சீருடை வழங்கினார்கள்.
இந்த பரிசளிப்பு விழாவில் கௌரவத் தலைவர் கலைவேந்தன், தலைவர்கள் கலை அமுதன், சித்ர வேல்,செயலாளர்கள் கோபி, இளமாறன், சிலம்பரசன், கீர்த்தி ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *