காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையும் இணைந்து ஒவ்வொரு கொம்யூன் பஞ்சாயத்துகளில் இரு முறை நடைபெறும் கால்நடை மற்றும் கோழிகள் பங்கேற்கும் கண்காட்சி நடைபெற்று வரும் நிலையில் திங்கட்கிழமை நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குறும்பகரத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடை மற்றும் கோழிகள் கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றன,
இன்நிகழ்ச்சியில் நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரியங்கா அவர்கள் கலந்து கொண்டு சிறந்த மாடுகள் மற்றும் கோழிகளுக்கு அதன் உரிமையாளர்களிடம் பரிசினை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கால்நடை துறையின் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் மற்றும் அதிகாரிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இன்றைய நிகழ்வில் 225 மாடுகளும் 140 கோழிகளும் இக்கண்காட்சியில் இடம்பெற்றன.