கரியமாணிக்கத்திலுள்ள அரசு கரும்பு உழவியல் ஆராய்ச்சி பண்ணையில் கரும்பு சாகுபடியில் பூச்சி மற்றும் நோய் குறித்த மேலாண்மை மற்றும் புதிய தொழில்நுட்பம் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. இதில் நெல்லிக்குப்பம் ஈ. ஐ. டி. பாரி சர்க்கரை ஆலை அதிகாரிகள் கலந்து கொண்டு கரும்பு உற்பத்தியில் பூச்சி மற்றும் நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.

பொதுவாக நாளுக்கு நாள் சர்க்கரையின் தேவை அதிகரித்து வருகிறது ஆனால் கரும்பு உற்பத்தி குறைவாகவே உள்ளது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே இந்த பயிற்சியின் நோக்கமாக இருந்தது. ஏற்கனவே புதுவையில் இருந்த அரியூர் சர்க்கரை ஆலை மூடப்பட்டு விட்டது.

அது முதல் விவசாயிகள் கரும்பு நடவு செய்வதை கைவிட்டனர். ஆகவே புதுவை விவசாயிகள் அதிக அளவில் கரும்பு பயிரிட வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. ஆனால் விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சரமாரியாக கேள்வியாக கேட்டனர்.

கரும்புக்கு கூடுதல் விலை கிடையாது இன்சூரன்ஸ் தொகை சரியாக வழங்கப்படுவதில்லை மானியத் தொகையும் சரிவர கொடுக்கப்படுவதில்லை தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு கரும்புக்கு உரிய விலை கொடுப்பது போல் புதுச்சேரியில்கரும்பு பயிரிடப்படும் விவசாயிகளுக்கு விலை சரிவர கொடுக்கப்படுவதில்லை. என்று அடுக்கடுக்காக விவசாயிகள் கேள்வி கேட்டதில் அதிகாரிகள் திக்கு முக்காடினர்

பதில் சொல்ல முடியவில்லை.மேலும் பல விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து இருக்கையை விட்டு புறப்பட்டுச் சென்றனர் இதனால் நாற்காலிகள் வெறிச்சோடி கிடந்தன. ஒரு சில விவசாயிகள் இந்த கூட்டமே கூட்டி இருக்க வேண்டாம் என்றும் ஃபார்மாலிட்டி கூட்டத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறினர்.

விவசாயிகள் கூட்டம் வேறு திசையில் செல்வதை கண்ட பத்திரிகை நிருபர்கள் இருக்கைகள் காலியாவதை புகைப்படம் எடுத்தபோது பக்தவச்சலம் என்ற விவசாய அதிகாரி நிருபர்களை கடிந்து கொண்டார்.

அதுமட்டுமல்லாமல் அங்கிருந்த செக்யூரிட்டி நபரை முடுக்கி விட்டு செக்யூரிட்டி நபர் நிருபர்களை என் அனுமதியின்றி எப்படி உள்ளே வரலாம் என்று கேட்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *