முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்*சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் புதுச்சேரி மாநிலத் தலைவர் ரவிஜான் வலியுறுத்தல்

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த நாராயணன்- மைதிலி இணையரின் மகள் சிறுமி ஆர்த்தி கடந்த 02.032024 அன்று தனது வீட்டின் அருகிலேயே காணாமல் போன நிலையில் நேற்று 05.03.2024 சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தி கடத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை போல புதுச்சேரியிலும் நடைபெற்று வருவது அதிர்ச்சியை அளிக்கிறது.புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தால் மக்கள் சுதந்திரமாக இல்லை பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கியுள்ளது .கை கால்கள் கட்டப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு போர்வை மற்றும் வேட்டியில் போர்த்தியபடி கால்வாயில் வீசப்பட்டு உள்ள சிறுமி ஆர்த்தியின் படுகொலைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும். புதுச்சேரி மாநில மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

சிறுமி ஆர்த்தியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து பொதுமக்கள் இடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை புதுச்சேரி அரசு போக்க வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் புதுச்சேரி மாநிலம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.அதேபோல் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு புதுச்சேரி அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம் இப்படிக்கு சமூகக் காவலர் திரு.ரவி ஜான் அவர்கள், மாநிலத் தலைவர் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அகில இந்திய சட்ட விழிப்புணர் இயக்கம் & அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *