நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு  நடக்கிறது.

நெட்டப்பாக்கம் ஏரிக்கரை வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெ. வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி அனைத்து பிரிவு நிர்வாகிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு கொறடா, இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு இந்தியா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதே காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தின் ஒட்டு மொத்த நோக்கமாகும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *