வேப்பூர் அருகே ஓரங்கூர் மங்களூர் பகுதி வீடுகளில் 10 பவுன் நகை 200 கிராம் வெள்ளி ஒரு லட்சம் பணம் திருட்டு
வேப்பூர் டிச 26
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மங்களூர் ஒரங்கூர் ஆகிய பகுதிகளில் மூன்று வீடுகளில் 10 பவுன் நகை ஒரு லட்சம் பணம் 200 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடி சென்ற மர்ம நபர்களை சிறுபாக்கம் போலிசார் தேடி வருகின்றனர்
வேப்பூர் வட்டம் ஒரங்கூர் ராயர் பாளையம் ரோடு வடக்கு காட்டுக்குட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கின்னசாமி மனைவி கலையரசி இவர் நேற்று முன்தினம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது இதனைக் கண்டு உள்ளே சென்றபோது வீட்டிற்குள் இருந்த பீரோ உடைத்து அதிலிருந்த 10 பவுன் தங்க நகை ஒரு லட்சம் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றுள்ளனர்
இது குறித்து சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் அதேபோல் மங்களூர் திரௌபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் ராமலிங்கம் என்பவர் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ரா என்பவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது வீட்டிலிருந்த 200 கிராம் வெள்ளி அரங்ஞான் கொடியை திருடி சென்றுள்ளனர்
ஒரே நாள் இரவில் மூன்று வீடுகளில்திருடிய மர்ம நபர்கள் குறித்து சிறுபாக்கம் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்