பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆண்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தஞ்சை வடக்கு மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அறிமுக கூட்டம்……
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம் கபிஸ்தலம் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அறிமுக கூட்டம் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாபநாசம் மத்திய மண்டல தலைவர் சுமதி வில்சன் வரவேற்புரை வழங்கினார். ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்பாபு முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பாஜகவின் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் தங்க கென்னடி, ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாநில செயலாளரும் திருச்சி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பரமகுரு மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள், மாவட்ட செயலாளர் உட்பட பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் பாபநாசம் மத்திய மண்டல் தலைவர் இராஜ்குமார் நன்றி கூறினார்..