திருவாரூர் மாவட்டம் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமின் இரண்டாம் நாள் நிகழ்வாக பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பரமகுரு பள்ளி வளாக தூய்மை பணியை தொடங்கி வைத்தார்.
மாணவர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பைகள், புல், பூண்டு, செடிகள் ஆகியவற்றை அகற்றி வளாகத்தை தூய்மைபடுத்தினர். மேலும் மாலை நிகழ்வாக பட்டதாரி ஆசிரியர் புஷ்பராஜ் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து, பிளாஸ்டிக்கின் தீமைகளையும், மறுசுழற்சியின் அவசியத்தையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
பேரணி மூலங்குடி கிராமத்தின் பல முக்கிய தெருக்கள் வழியாக சென்று ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முடிவு பெற்றது. பேரணியில் பட்டதாரி ஆசிரியர் அறிவழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக திட்ட அலுவலர் பக்கிரிசாமி நன்றி கூறினார்.