C K RAJAN Cuddalore District Reporter
9488471235..
கடலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சோசலிச நாடான வெனிசுலா மீது அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவத்தை கண்டித்தும்… அமெரிக்க ஏகாதிபத்திய போர் வெறியன் டிரம்ப் வெனிசுலா நாட்டின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க, அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலி ஃபுளோரஸ் இருவரையும் கைது செய்து நாடு கடத்தியதைக் கண்டித்தும்…
கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்து அவர்களுடைய உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டக் குழு சார்பாக நேற்று ஜவான்ஸ் பவன் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்…
இப் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட செயலாளர் தோழர். ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.மாநகர செயலாளர் டி.நாகராஜ் மாநகர துணைச் செயலாளர் ஜி.மணிவண்ணன் மாநகரப் பொருளாளர் சி கே ராஜன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட குழு உறுப்பினர்கள் குளோப்,சுந்தர் ராஜா,வட்ட துணைச் செயலாளர்கள் வி.ஆர்.முருகன், ஜே.பன்னீர்செல்வம் வட்டக் குழு உறுப்பினர்கள் அரசன்,அமாவாசை, அரிகிருஷ்ணன், பாக்கியம், சுரேஷ்,மணிகண்டன்,ஜாஃபர்அலி, செல்வம், காங்கேயன் மற்றும் தோழர்கள் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.