செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட காவாதூர் இருளர் குடியிருப்பு பகுதியில் உள்ள சுரேஷ் சித்ரா தம்பதியின் குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். குடிசைகளில்
பாதி எரிந்த நிலையில் துணி உள்ளிட்ட பொருட்களும் எரிந்து சேதம் அடைந்த நிலையில் குடும்பத்தினர் மிகவும் வறுமையில் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நேரில் சென்று வேட்டி சேலை அரிசி பணம் கொடுத்து உதவினர்.
இதில் மதுராந்தகம் அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் மதுராந்தகம் ஒன்றிய குழு உறுப்பினர் சங்கர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.