கோவை கொடிசியாவில் சர்வதேச கட்டிட மற்றும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி,பில்டு இண்டெக் 12 வது பதிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் நீர் சுழற்சி தொழில்நுட்ப கண்காட்சி வாட்டர் இன் டெக் மூன்றாவது பதிப்பு என இரண்டு கண்காட்சிகள் வரும் பிப்ரவரி 3ஆம் தேதி துவங்கி 6 ஆம் தேதி நடைபெற உள்ளது..
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கொடிசியா அலுவலகத்தில் நடைபெற்றது.கொடிசியா தலைவர் திருஞானம்,துணை தலைவர் கார்த்திகேயன்,செயலாளர் சசிகுமார்,பில்டு இண்டெக் கண்காட்சியின் தலைவர் சிவக்குமார்,துணை தலைவர் வள்ளல் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினார்.. வரும் பிப்ரவரி மூன்றாம் தேதி துவங்கி ஆறாம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சி துவக்க விழாவில் அமைச்சர்கள் முத்துச்சாமி ,செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளதாகவும் ஒரு லட்சம் சதுர அடியில் நடைபெற உள்ள கண்காட்சியில் 290 அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுமார் 40,000 பார்வையாளர்களை எதிர்பார்ப்பதாக கூறிய கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுமான பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் சார்ந்த உபகரணங்கள் நவீன ஆற்றல் கருவிகள் இயந்திரங்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானம் தொடர்பான பொருட்களும் வாட்டர் இன்டக் கண்காட்சியில் திடக்கழிவு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் பயோ செப்டிக், ஓசோன் ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான நீர் மேலாண்மை தொடர்பான கருவிகள் காட்சிப்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.குறிப்பாக பில்டு இண்டெக் கண்காட்சி இனி வருடத்திற்கு ஒரு முறை நடத்த உள்ளதாகவும் கூறினர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *