5ஆண்டு காலம் முயற்சியில் கண்டுபிடிப்பு மண்ணுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு அர்ப்பணிப்பு
தாராபுரத்தை அடுத்த சோமன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்நாடு அரசு கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற விஞ்ஞானி சரவணன், இவர் தனது 5 கால ஆராய்ச்சியின் முடிவாக இயற்கை விவசாயத்தின் மூலம் மண்வளம்,நீர் வளங்களை பாதுகாத்து ரசாயன கலப்பே இல்லாமல் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப மண்ணில் உள்ள .05 சதவீதம் மட்டுமே உள்ள அங்கக கனிமத்தை கட்டு மூடாக்கு என்ற நவீன மற்றும் இயற்கை முறையில் இவர் கண்டுபிடிப்பின் மூலம் 2.05 சதவீதமாக உயர்த்தும் முறையை தனது 5 கால ஆராய்ச்சிக்கு பின் விவசாயிகளுக்கு அர்ப்பணம் செய்து சாதனை படைத்துள்ளார்.
பயிரிடப்படும் மா, தென்னை, பப்பாளி, தக்காளி, உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை பயிர்களை ரசாயன உரங்களை இல்லாமல் பயிர்களின் உற்பத்தி திறனையும், சுவையையும் பல மடங்கு அதிகரித்து தோட்டக்கலை பயிர்களின் மீதான நுகர்வோர்களது வரவேற்பை பல மடங்கு அதிகரித்து இயற்கை விவசாயத்தில் புதிய மைல் கல்லை அடைய முடியும் என்று தெரிவித்தார்.
தனது புதிய இயற்கை வேளாண் முறை கண்டுபிடிப்பு குறித்து வேளாண் விஞ்ஞானி சரவணன் அப்பகுதி விவசாயிகளுக்கு மண்ணுக்கு பொங்கல் என்ற புதிய ஒரு பொங்கல் விழாவினை நடத்தி தோட்டக்கலை பயிர்களை பயிரிடும் விவசாயிகளுக்கு தனது புதிய கண்டுபிடிப்பு முறை பற்றி அறிமுகப்படுத்தி விவசாயிகளுக்கு அதை அர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தினார்,
முதல் கட்டமாக 5 ஏக்கர் நிலப்பரப்பில் இடைவெளி பயிரான பப்பாளி பயிரிட்டு விவசாயத் தோட்டத்தில் சுற்றிலும் வளரும் களை பயிர்களான புல் பூண்டு செடி கொடிகளின் சருகுகளை ஒன்றாக திரட்டி நடவு செய்யப்பட்டுள்ள மரம் ஒன்றுக்கு
5 கிலோ எடையுள்ள களைச்செடி கொடிகளை ஒரு கட்டாக கட்டி செடியின் அருகிலேயே வைத்து சொட்டு நீர் பாசனம் மூலம் செடிக்கு தண்ணீர் செலுத்தினால் கட்டு மூடாக்கு பயிரின் கீழ் பரவும் பாசனசொட்டுநீர் சூரிய ஒளியால் கிரகிக்கப்படாமலும் கட்டு மூடாக்கின் கீழ் பகுதியில் வறட்சி ஏற்படாமல் ஈரத்தன்மை நிலைத்து நிற்கும் .
மண்ணில் உள்ள .5% சதவீதம் மட்டுமே உள்ள இந்திய மண்ணின் அங்கக கனிம சத்துக்களை 2. 5% ஆக உயர்த்தி பயிரிடப்படும் தாவரங்களுக்கு வழங்குவதன் மூலம் கட்டு மூடாக்கு பயிரிடும் முறையில் உற்பத்தி செய்யப்படும்.
பயிர்கள் பழ வகைகள் மடங்கு உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன், பப்பாளி பழங்கள் மிக அதிகமான சுவை மிகுந்ததாக உற்பத்தியாகி உள்ளது .
பரிசோதனை முறையில் மேலும் 10 விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து அவர்களும் கட்டு மூடாக்கு முறையை விவசாயத்தில் பயன்படுத்தியதன் மூலம் அவர்களுக்கும் உற்பத்தியும் சுவை மிகுந்த காய்கனிகளும் கிடைத்து விற்பனைச் சந்தையில் அவர்களுக்கென்று ஒரு தனியான வரவேற்பை பெற்று வருகிறது,
தமிழர் திருநாளாம் பொங்கல் முன்னிட்டு சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல் என்ற இருவகை பொங்கலை கொண்டாடி வரும் நிலையில் இந்த மண்ணுக்கும் மரியாதை சஅடிப்படையில் என்பதன் அ மண்ணுக்கு பொங்கல் வைத்து அப்பகுதி இயற்கை விவசாயிகளும் உற்சாகமாக கொண்டாடினர்.