தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மண்டல கலை பண்பாட்டு மையத்தின் வாயிலாக பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன்
தலைமையில் நடைபெற்றது.சிறப்பு விருந்தினராக உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் கலை நிகழ்ச்சி நிகழ்த்திய கலைஞர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

முதல் நிகழ்ச்சியான நர்த்தனாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்வும், அம்பேத்குமார் கலைக்குழுவினரின் தப்பாட்டம், கண்ணந்தங்குடி மலையேறி அம்மன் பெண்கள் களைக்குழுவினரின் கிட்டி கோலாட்டம், கும்பகோணம் சங்கமம் கலைக்குழுவினரின் நாட்டுப்புற ஆடல் பாடல் மற்றும் சாமியாட்டக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பொங்கல் கலை விழாவினை முன்னிட்டு இரண்டாம் நாள் 16.01.2026 நிகழ்ச்சியாக ருத்ராலயா நாட்டியப்பள்ளி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்வும், வெட்ட வெளிப்பாட்டுக்காரன் கலைக்குழுவினரின் கிராமிய ஆடல் பாடல் மற்றும் மாடாட்டம், மயிலாட்டம், தஞ்சாவூர் நாட்டுப்புற நையாண்டி மேளம் கலைக்குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சியும், தஞ்சை மல்லிகா பிரகாஷ் கலை குழுவினரின் பல் சுவை கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சபாகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் க. ஈஸ்வரன், திவ்யஸ்ரீ, ரெங்கநாயகி, மற்றும் கலையாசிரியர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *