கோவையில் இந்திய ஒற்றுமை இயக்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா தடாகம் சாலையில் உள்ள டிரினிட்டி லேப்ஸ் மற்றும் ஸ்கேன்ஸ் மையம் முன்பாக நடைபெற்றது..

இந்திய ஒற்றுமை இயக்கத்தின் மாநில பொருளாளர்,மருத்துவர் டென்னிஸ் கோவில் பிள்ளை தலைமையில் நடைபெற்ற விழாவில்,தந்தை பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன், தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,தமிழக காப்பு கூட்டியக்கம் தலைவர் கா.ச.அப்பாவு உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்பு தலைவர்கள் கலந்து கொண்டனர்..

முன்னதாக திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செய்யப்பட்டு பொங்கல் வைக்கப்பட்டது..

முன்னதாக விழாவில் பேசிய தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி,
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதமர் தமிழர்களுக்கு மிக நெருக்கமாக இருப்பதாக நடித்து வருவதாக கூறிய அவர்,அண்மையில் பீகாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தமிழகத்தில் பீகார் மாநிலத்தவர்களை விரட்டுவதாக பொய் பிரச்சாரம் செய்ததை சுட்டி காட்டினார்..

பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கான விழா என்று கூறிய அவர்,பா.ஜ.க.வை சேர்ந்த சிலர் இதில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக கூறிய அவர்,தமிழர்கள் இது போன்ற பொய் பிரச்சாரங்களை ஒரு போதும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய தந்தை பெரியார் திராவிடர் இயக்க பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்,வேளாண்மை செய்யும் மக்கள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் விழா என கூறிய அவர்,இயற்கையிலேயே ஒட்டு மொத்த மக்களும் விவசாயம் செய்துள்ளதாக அவர் கூறினார்..

எனவே பொங்கல் பண்டிகை என்பது அனைவருக்குமான விழா,சாதி,மத,வேற்றுமைகள் இல்லாத திராவிட தமிழர்களுக்கான விழா என அவர் கூறினார்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *