தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் ஈசன் முருகசாமி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து , தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் பழனியப்பன்,பொருளாளர் வீரப்பன் ஆகியோர் தமிழக அரசுக்கு கண்டனம் .தெரிவித்துள்ளார்கள். பின்னர் பேசியதாவது:

கோழி பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் பகுதியில் விவசாயிகள் கோழிப் பண்ணைகளில் குஞ்சு இறக்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,இந்நிலையில் இந்த போராட்டம் தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசன் முருகேசனை போலீசார் நள்ளிரவில் கைது செய்துள்ளனர்.அவரை உடனே விடுதலை செய்யவேண்டும் .இல்லையென்றால் அனைத்து விவசாயிகள் சங்கமும் ஒன்றிணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறன் என்றனர்.

உடன் தஞ்சை மாவட்ட .ஒருங்கிணைப்பாளர் விசுவலிங்கம், மற்றும் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய தலைவர் பி.ரவிச்சந்திரன் ,காமராஜ்,ரவிச்சந்திரன்
பாலையன் ஆகியோர் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *