திருச்சி மாநகராட்சி பொன்மலை மண்டல அலுவலக உதவியாளரான ராஜசேகர் (35), ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து வேலைக்குச் செல்லாமல் இருந்தார்.
கடந்த 9ஆம் தேதி உறவினர் பார்க்க வந்தபோது, வலிப்பு ஏற்பட்டு மயங்கிக் கிடந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜசேகர் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது சகோதரி ரூபிணி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மண்னை
க.மாரிமுத்து.