தேனியில் முதன்மை தேர்வுக்கு இலவச முழு மாதிரித் தேர்வுகள் மாவட்ட கலெக்டர் தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டு குரூப் ll மற்றும் llA 645 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த 28.09.2025. அன்று நடைபெற்றது இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த மாதம் 08.02.2026. அன்று முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது டிஎன்பி எஸ்.சி குரூப் ll மற்றும் llA முதன்மை தேர்விற்கு சிறந்த வல்லுநர்கள் மூலம் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு மாநில அளவிலான இலவச முழு மாதிரி தேர்வுகள் 24.01.2026 மற்றும் 31.01.2026. ஆகிய தேதிகளில் காலை 10 மணி பிற்பகல் 01.00 மணி வரை தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் டி என் ப டி.என்.பி.எஸ்.சி தரத்தில் நடைபெற உள்ளது

இத்தேர்வினை எழுத வருகை புரியும் தேர்வர்கள் விண்ணப்பம் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் மேலும் இம்முழு மாதிரி தேர்வில் பங்கு பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களின் பெயரை 63792 68661 இல்ல என்ற செல் பேசி எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார் இந்த தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலர் இரா நல்லதம்பி அறிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *