போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து துறையூரில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் போக்குவரத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
துறையூர் ஜன-23
திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல் மற்றும்
மாண்புமிகு துறையூர் வட்ட சட்டப்பணிகள்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சி.விஜய் கார்த்திக்-ன் உத்தரவின் படி துறையூர் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் ஓயாசிஸ் தொழில்நுட்பக் கல்லூரி புலிவலம் & துறையூர் போக்குவரத்து காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி 21-01-2026 அன்று மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.
இப்பேரணியை வட்ட சட்டப் பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதி சி.விஜய் கார்த்திக் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி டி.அன்பு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இப்பேரணி துறையூர் சார்பு நீதிமன்றத்தில் இருந்து துறையூர் பேருந்து நிலையம் வரை சென்று நிறைவடைந்தது.இதில் கல்லூரி மாணவர்கள் சட்ட விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிகழ்வில் பேசிய சார்பு நீதிபதி சி.விஜய கார்த்திக் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம், மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது, வேகத்தைக் குறைப்பது, பாதசாரிகள் ஜீப்ரா கிராசிங்கைப் பயன்படுத்துவது போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் பொதுமக்களிடம் மாணவர்கள் கொண்டு செல்ல வேண்டும்,
மேலும் வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்து மாணவ மாணவிகளிடம் சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இப்பாரணையில் போக்குவரத்து காவல்துறை உதவி காவல் ஆய்வாளர் அப்துல்லா, உதவிக்காவல் ஆய்வாளர் ஆசைத்தம்பி,மூத்த வழக்கறிஞர் மலர்முகிலன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கார்த்திகேயன், செயலாளர் முகமது ரஃபீக், பொருளாளர் நரேஷ் குமார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜெயராஜ், வழக்கறிஞர்கள் ஏ எஸ் மனோகரன்,செல்வராஜ்,
புலிவலம் ஓஎஸ் கல்லூரி முதல்வர் ஆன்டோ ஸ்பிரிட்டஸ் கிங்ஸ்லி, இயக்குனர் பழனிவேல், உதவி பேராசிரியர்கள் கோகிலா, தினேஷ் பாபு, பிரியதர்ஷினி, தமிழ்ச்செல்வி,ரூபநாத், ஜெய்கணேஷ், ஒருங்கிணைப்பாளர் மேனகா போக்குவரத்து காவல் துறை காவலர்கள் முனீஸ்வரன், ஸ்ரீதர்,காஞ்சனா, குற்றப்பிரிவு காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்