ஈரோடு ஈ.கே. எம்.அப்துல் கனி மதரசா இஸ்லாமியர் பள்ளியில் கடந்த 2004-2005 ஆண்டு படித்து வெளிவந்த முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது.
இது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில் பேசிய பள்ளியின் தாளாளர் அல்ஹாஜ்.G.முகமது தாஜ் முஹ்யித்தீன் பேசும்போது இப்பள்ளியில் படித்த அனைவருமே ஆசிரியர் மற்றும் எங்களுக்கு பிள்ளைகள் தான் எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் அதே பாசத்துடன் மாணவர்களும் மாணவிகள்
பழகி வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மாணவிகள் தங்களுடைய நிதி நிலைக்கேற்ப தற்போது படித்து வரும் மாணவ மாணவிகள் யாராவது ஒருவரை மேல்நிலைக் கல்வி வரை கல்லூரி படிப்பு வரை அவர்களை படிக்க வைப்பதற்கு
தத்தெடுத்து கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் என்னால் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் அனைவரும் ஏழ்மை நிலையில் இருந்து அப்படி தொடர்வதால் இது மாணவர்களுக்கு செய்யும் உதவி என்றும் கல்விக்கு செய்யும் தொண்டு வாழ்நாள் முழுவதும் மிகப்பெரும் பாக்கியத்தை தரும் என்பதால் இதை முன்னாள் மாணவர்கள் செயல்பட வேண்டும் என அறிவுரை கூறினார்.
மேலும் முன்னாள் மாணவர்கள் கூறும் போது எத்தனை ஆண்டுகள் படித்து வந்தாலும் ஆசிரியர்களை பார்க்கும்போது தங்களுக்கு ஒரு பயம் கலந்த மரியாதை ஏற்படுத்துவதாகவும் தங்கள் வாழ்க்கைக்கு ஒளியேற்றிய ஆசிரியர்கள் நீண்ட ஆயுளுடனும் மற்றும் மாணவர்களுக்கு போதிக்க வேண்டும் எனும் கேட்டுக் கொண்டனர் மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் முன்னாள் மாணவ மாணவி சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.